பச்சை பட்டாணி டோக்ளா

5c7c96fc-0f0b-4088-a963-d179c11f0abf_S_secvpf

தேவையான பொருட்கள் :

ஃப்ரெஷ் பச்சை பட்டாணி – அரை கப் 
கடலை மாவு – ஒரு கப் 
இஞ்சி – சிறு துண்டு 
பச்சை மிளகாய் – 4 
உப்பு  சர்க்கரை – அரை தேக்கரண்டி 
ENO – 5 கிராம் 
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி 
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி 

தாளிக்க: 

எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி 

கடுகு – ஒரு தேக்கரண்டி 
எள்ளு – ஒரு தேக்கரண்டி (விரும்பினால்) 
மிளகாய் வற்றல் / பச்சை மிளகாய் – 2 

அலங்கரிக்க: 

கொத்தமல்லி – சிறிது 
தேங்காய் துருவல் / பனீர் – சிறிது 

செய்முறை :

• பட்டாணி, இஞ்சி, பச்சை மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து நைசாக சிறிது நீர் விட்டு அரைக்கவும்.

• கடலை மாவுடன், உப்பு, சர்க்கரை சேர்த்து கலந்து அத்துடன் அரைத்த விழுதை நன்றாக கலந்து விடவும். பதம் சரியாக வரவில்லை என்றால் இன்னும் சிறிது வெது வெதுப்பான நீர் சேர்க்கலாம்.

• இதில் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வேக வைக்க பயன்படுத்த வேண்டிய பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க விடவும். மாவை ஊற்றி வைக்க வேண்டிய தட்டில் எண்ணெய் தடவி வைக்கவும்.

• சட்டியில் நீர் நன்றாக கொதிக்க துவங்கியதும் ஈனோவை மாவில் சேர்க்கவும்.

• மாவை வேகமாக கலந்து தட்டில் ஊற்றி தட்டை லேசாக அசைத்து சமப்படுத்தி உடனே சட்டியில் வைத்து மூடி வேக வைக்கவும். 15 நிமிடம் வரை எடுக்கும். கத்தியால் குத்தி பார்த்து வெந்ததும் எடுத்து மேலே சிறிது நீர் தெளிக்கவும்.

• கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து டோக்ளா மேல் பரவலாக கொட்டவும். பின் டோக்ளாவை விருப்பம் போல் வடிவங்களில் நறுக்கி மேலே கொத்தமல்லி, தேங்காய் துருவல் அல்லது பனீர் போன்றவை தூவி இனிப்பு புளிப்பு சட்னியுடன் பரிமாறவும்.

Leave a Reply