10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கு டில்லியில் தடை. புதிய உத்தரவு அமல்

delhiதலைநகர் புதுடில்லியில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க ஏற்படுத்தப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை டெல்லியில் பயன்படுத்த தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு ஒன்றில், ”டெல்லியில் காற்றின் தரம் பரிந்துரை அளவையிட சீர்கெட்டு வருவதாக கடந்த நவம்பர் 26, 28 மற்றும் டிசம்பர் 4ஆம் தேதிகளில் சுட்டிக்காட்டப்பட்டும், அதற்கு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்துக்குரியது என்றும் டீசல் புகையால் நுரையீரல், மூளை போன்றவை பாதிக்கப்பட்டு புற்றுநோய் உண்டாக அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு நகரின் சுற்றுச்சூழலும் மிகவும் பாதிப்படைந்து வருகிறது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி மாநகரம் பல்வேறு நோய்களுக்கு தாயகமாக இருக்கிறது என்றும் இந்த நிலையை தவிர்க்க 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்களை டெல்லியில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும் அந்த உத்தரவு தெளிவாக கூறியுள்ளது. மேலும், அதுபோன்ற வாகனங்களின் பதிவு தகவல்களை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும்” என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply