படப்பிடிப்பின் போது ரயில் மோதி பிரபல நடிகர் பலி.

Greg-Plitt-mainகுட் ஷெப்பர்டு, டெர்மினேட்டர் 4, வாட்ச்மேன் போன்ற ஹாலிவுட் படங்களிலும் பல விளம்பர படங்களிலும் நடித்து உலகம் முழுவதிலும் உள்ள பலகோடி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் கிரேக் பிட் (Greg Plitt ) நேற்று முன் தினம் எதிர்பாராத வகையில் ரயில் விபத்தில் பரிதாபமாக பலியானார்.

37 வயதான கிரேக் பிட், நேற்று முன் தினம் ரயில்வே டிராக்கில் விளம்பர படம் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எதிர்பாராத வகையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மெட்ரோ ரயில் மோதி பலியானதாக கூறப்படுகிறது.

புரோட்டீன் பொருள் ஒன்றுக்கு விளம்பர மாடலாக ஒப்பந்தமாகியிருந்த கிரேக் பிட், ரயில்வே டிராக்கில் நின்று கொண்டு அந்த பொருள் குறித்து உயர்வாக வசனம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வந்த மெட்ரோ ரயில் அவர் மீது மோதியதால் சம்பவ இடத்தில் பலியானதாகவும், இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ரயில் வரும் நேரத்தில் ரயில்வே டிராக்கில் படப்பிடிப்பு நடத்திய அந்த விளம்பர படத்தின் இயக்குனர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply