குரூப்-2 தேர்வு: ஜனவரி 24-க்கு தள்ளிவைப்பு

Entrance-Exam

குரூப்-2 தேர்வை 2016 ஜனவரி 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

எழுதுபொருள், அச்சகத் துறை, நில அளவை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் 1,863 நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வு டிசம்பர் 27-இல் நடத்தப்படும் என டி.என்.பி.எஸ்.சி. கடந்த 12-இல் அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான “நெட்’ தேர்வும் டிசம்பர் 27  நடைபெறுகிறது.

ஒரே நாளில் இரு தேர்வுகள் நடைபெறுவது குறித்து, “தினமணி’யில் “டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி மாற்றப்படுமா?’ எனும் தலைப்பில் சனிக்கிழமை (அக்டோபர் 17) செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து, தேர்வு தேதியை மாற்றி டி.என்.பி.எஸ்.சி.  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப்-2 தேர்வு அறிவிப்பை கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதில், 84 கூடுதல் பதவிகள் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான தேதி மாற்றப்பட்டு, 2016 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெறும்.

இதுதொடர்பான சந்தேகங்களுக்கு c‌o‌n‌t​a​c‌t‌t‌n‌p‌s‌s​c​@‌g‌m​a‌i‌l.c‌o‌m​  என்ற மின்அஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply