GSLV D5 செயற்கைக்கோள் கவுண்ட் டவுன் இன்று தொடக்கம்

இந்தியாவின் அடுத்த செயற்கைக்கோளான ஜி.எஸ்.எல்.வி. டி-5, விண்ணில் ஏவுவதற்கு இன்று காலை 11.18 முதல் கவுண்ட் டவுன் தொடங்கும் என நேற்று இஸ்ரோ விடுத்த ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது.

ஜி.எஸ்.எல்.வி. டி-5 என்ற இந்த செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான 29 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 11.18 இருந்து தொடங்குகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து நாளை மிகச்சரியாக மாலை 4.18க்கு விண்ணில் ஏவப்படும்.

இந்த ராக்கெட் பூமியில் இருந்து 35ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா இதற்கு முன்பு ஏழு ஜி.எஸ்.எல்.வி செயற்கைக்கோளை ஏவியுள்ளது. இது எட்டாவது செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோளின் மொத்த ஆயுட்காலம் 12 வருடங்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply