ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ
இஸ்ரோ அனுப்பிய ஜிசாட்-6 செயற்கைக்கோளை ஏந்திக் கொண்டு ஜி.எஸ்.எல்.வி.-டி6 ராக்கெட் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா மேலும் ஒரு வெற்றிகரமான ராக்கெட்டை ஏவியுள்ளது என்பது குறிப்பிடத்டஹ்க்கது.
எஸ் பேண்ட் தொலைத்தொடர்புக்காக ஜிசாட்-6 செயற்கைகோளை, ஜி.எஸ்.எல்.வி.-டி6 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் இன்று மாலை 4.52 மணிக்கு விண்ணில் சீறிப் பாய்ந்தது. 49 மீட்டர் உயரமும், 416 டன் எடையும் கொண்ட இந்த ஜிசாட்-6 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்
இந்த செயற்கைக்கோளில் 6 மீட்டர் ஆன்டெனாவும் உள்ளது. இதுபோன்ற ஆன்டெனாவை இந்தியா பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். அதேபோல், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 3வது கிரையோஜெனிக் என்ஜினும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் பாய்ந்த 18வது நிமிடத்தில், தற்காலிக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.
இது வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார், ”இது ஒரு ஒட்டுமொத்த விஞ்ஞானிகளின் முயற்சியால் ஜிசாட்-6 நிலைநிறுத்தப்பட்டது” என்றார்