உலக அளவில் இந்தியாவில் தான் ஜிஎஸ்டி அதிகம்: உலக வங்கி

உலக அளவில் இந்தியாவில் தான் ஜிஎஸ்டி அதிகம்: உலக வங்கி

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்ற ஒரே நாடு ஒரே வரி என்ற முறை அறிமுகம் செய்தது. ஆனால் ஜிஎஸ்டி வரி அதிகமாக இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டிய நிலையில் தற்போது உலக வங்கி இதனை உறுதி செய்துள்ளது. உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவின் ஜி.எஸ்.டி. வரி, மிகவும் அதிகமாக இருப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது

இந்தியாவில் 5, 12, 18, 28 சதவீதம் என 4 வகைகளில் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜி.எஸ்.டி வரி அதிகம் வசூலிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

உலகளவில் 115 நாடுகளில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு உள்ளது. ஆனால் இந்தியாவின் ஜி.எஸ்.டி. கூடுதல் வரிவிகிதத்துடனும், அதிக அடுக்குகளுடனும் இருப்பதால் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது’ என உலக வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply