மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது. பாஜக அரசுக்கு மேலும் ஒரு வெற்றி
பாஜகவின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகிய நாடு முழுவதும் ஒரேவிதமான வரி என்னும் ஜிஎஸ்டி மசோதா நேற்றிரவு மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேறியது பாஜகவுக்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக கருதப்படுகிறது.
இந்த மசோதாவின் நான்கு பிரிவுகளும் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேறியுள்ளதாகவும், இதேபோன்று விரைவில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்பட ஒருசில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுடைய எதிர்ப்புக்கு அவர்கள் கூறிய காரங்களில், மக்களவையின் அலுவல் பட்டியலில் மசோதா தாக்கல் செய்வது தொடர்பான விவரம் இடம்பெறவில்லை என்றும், மசோதாவை விரிவாக படிப்பதற்கு போதிய அவகாசம் வழங்கப்படவில்லை ஆகியவை முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.