ஜிஎஸ்டி மூலம் விலை குறையும் பொருட்கள்
வரும் ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி என்னும் வரிவிதிப்பு முறை நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ள நிலையில் ஜிஎஸ்டியால் விலை குறையும் பொருட்கள் குறித்த விபரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.
இந்த புதிய வரி விதிப்பு முறை மூலம் விலை வீழ்ச்சி காணும் பொருட்கள் என்னென்ன என்று பார்ப்போம். முந்திரி உள்ளிட்ட பருப்பு வகைகள், கார்கள், பால் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகள், சமையல் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில், பாப்கார்ன், பிஸ்கெட்டுக்கள், பழச்சாறு மற்றும் குளிர்பானங்கள் ஆகிய பொருட்கள் விலை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது