ஓலாவில் ஆட்டோ புக் செய்தால் வரி: மத்திய அரசு அறிவிப்பு

ஓலா, உபேர் போன்ற செயலிகள் மூலம் ஆட்டோ முன்பதிவு செய்தால் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆன்லைனில் ஆட்டோ சேவைகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு சற்றுமுன் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஓலா, உபேர் போன்ற செயலிகள் மூலம் ஏராளமானோர் ஆட்டோக்களை முன்பதிவு செய்து வரும் நிலையில் இந்த சேவைக்கும் 5% ஜிஎஸ்டி கட்டணத்தை மத்திய அரசு விதித்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த கட்டணம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஆட்டோ சேவைக்கட்டணம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.