• எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் நிறைந்துள்ளது. இத்தகைய எலுமிச்சையின் சாற்றில் சிறிது நீர் கலந்து, அதனை கருமையாக உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையைப் பின்பற்றிய பின், 24 மணிநேரத்திற்கு வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.
• ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து, அதனை கருமையாக உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், கருமையான தழும்புகளை நீக்கிவிடும். இதனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது.
• ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1/2 எலுமிச்சையை பிழிந்து, பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி 10 நாட்களுக்கு ஒருமுறை செய்து வர, முகத்தில் உள்ள கருமை நீங்கும்.