உலகின் மிக வயதான ஆணாக கின்னஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டவரின் வயது எத்தனை?

உலகின் மிக வயதான ஆணாக கின்னஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டவரின் வயது எத்தனை?

guinnessஜப்பானில் வாழும் 112 வயது  யாசுட்டாரோ கொய்டே என்பவர் உலகில் வாழும் மிக அதிகமான ஆண் என கின்னஸ் சாதனை நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறித்துள்ளது. அவருக்கு முறைப்படி சான்றிதழும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய ஜப்பானில் உள்ள நகோயா என்ற நகரில் வாழும் கொய்டே அவர்கள் கடந்த 1903ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி பிறந்ததாக அவருடைய பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் வாழ்ந்து வந்த சகாரி மோமோய்(112) என்பவர் இதுவரை உலகின் அதிக வயதான ஆணாக இருந்தார். ஆனால் அவர் சென்ற மாதம் மரணம் அடைந்ததை அடுத்து உலகின் வயதான ஆண் என்பதை கின்னஸ் நிறுவனம் கண்டுபிடிக்கும் பணியில் கடந்த ஒரு மாதமாக இருந்தது.

இதையடுத்து, உலகில் வாழும் மிக அதிக வயதான ஆண் என்ற கவுரவம் யாசுட்டோரோ கொய்டேவுக்கு கிடைத்துள்ளது. வெறும் ரொட்டியை மட்டுமே விரும்பி சாப்பிடுவதாக கூறும் கொய்டே, கண்ணாடி அணியாமல் செய்தித்தாள்களை வாசிப்பதாகவும், நல்ல ஆரோக்கியத்துடன் தனது சுயத்தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்வதாகவும் பெருமையுடன் கூறுகிறார்.

Leave a Reply