குஜராத் மாநில சபாநாயகருக்கு பன்றிக்காய்ச்சல். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

swine fluஇந்தியாவின் வடமாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சமீபத்தில் ஆந்திர பிரதேச மாநில அமைச்சர் ஒருவரையும் பன்றிக்காய்ச்சல் தொற்றியதை சமீபத்தில் பார்த்தோம். இந்நிலையில் குஜராத் மாநில சபாநாயகர்  கண்பத் வாஸவா அவர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்பத் வாஸவா, உடல்நலக் குறைவுக் காரணமாக நேற்று முன் தினம் இரவு சூரத்தில் உள்ள மகாவீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு  மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து, அவர் அவசரச் சிகிச்சைப் பிரிவின் தனி அறைக்கு மாற்றப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது குஜராத் சபாநாயகரின் உடல்நிலை தேறி வருவதாக கூறப்படுகிறது. குஜராத் முதல்வர், மற்றும் அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply