வங்கியில் கடன் பெற்று 2654 கோடி ரூபாய் மோசடி செய்த இன்னொரு நிறுவனம்

வங்கியில் கடன் பெற்று 2654 கோடி ரூபாய் மோசடி செய்த இன்னொரு நிறுவனம்

வங்கிகளில் மோசடியாக கடன் பெறும் நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகி வருகிறது. ஏற்கனவே விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட பல தொழிலதிபர்களின் நிறுவனங்கள் வங்கியில் மோசடி செய்துள்ள நிலையில் தற்போது குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 2654 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிவித்துள்ளது.

குஜராத்தின் வடோதராவைச் சேர்ந்த Diamond Power Infrastructure என்ற தனியார் நிறுவனம், கடந்த 2008ம் ஆண்டில் இருந்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று வந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டின் ஜூன் மாத நிலவரப்படி, அந்த நிறுவனம் வங்கிகளுக்கு 2654 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

கடன் வாங்குவதற்கான உத்தரவாதங்களை அளித்ததில், இந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதும் தற்போது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து, இந்நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து இந்நிறுவனம் ரிசர்வ் வங்கியின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

Leave a Reply