புரோ கபடி: டெல்லியை வென்று முதலிடம் பிடித்த குஜராத்
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணி 29-25 என்ற புள்ளிக்கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி ஏ பிரிவில் 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
இதேபோல் இன்னொரு போட்டியில் உபி அணி, தெலுங்கு டைட்டான்ஸ் அணியை 39-32 என்ற புள்ளிக்கணக்கில் வென்றுள்ளது.
இன்றைய புரோ கபடி ஆட்டத்தில் பாட்னா அணியும், உபி அணியும் மோதுகின்றன. இன்னொரு ஆட்டத்தில் குஜராத் அணி ஜெய்ப்பூர் அணியுடன் மோதுகின்றன.