தோனியை வீழ்த்தினார் சுரேஷ் ரெய்னா…
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்று விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் தோனியின் புனே அணியை சுரேஷ் ரெய்னாவின் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற புனே அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். புனே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ரன்கள் எடுத்தது. டீபிளஸ்சிஸ் 69 ரன்கள் குவித்தார்.
வெற்றி பெற 164 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய குஜராத் அணி, 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பின்ச் 50 ரன்களும், மெக்கல்லம் 49 ரன்களும் எடுத்தனர். பின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே இன்று டெல்லி மற்றும் பஞ்சப் அணிகள் மோதுகின்றன.