புனே அணியை வீழ்த்தியது குஜராத்! தோனியை அவமதித்ததால் தண்டனையா?

புனே அணியை வீழ்த்தியது குஜராத்! தோனியை அவமதித்ததால் தண்டனையா?

புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து அந்த அணியின் நிர்வாகம் தோனியை நீக்கி அவமதித்ததன் பாவம் அந்த அணிக்கு சேர்ந்துள்ளதால் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதாக கூறப்படுகிறது. நேற்று நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டிய்யில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு செய்ததால் முதலில் புனே அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஸ்மித் 43 ரன்களும், திரிபதி 33 ரன்களும் எடுத்தனர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி புனே அணியினர்களின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 18 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய குஜராத் அணியின் டையி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியால் 4 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற புனே அணி கடைசி இடத்தில் உள்ளது.

Leave a Reply