ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்

Dinesh karthik of Gujrat Lions in action during match 3 of the Vivo Indian Premier League ( IPL ) 2016 between the Kings XI Punjab and the Gujarat Lions held at the IS Bindra Stadium, Mohali, India on the 11th April 2016Photo by Prashant Bhoot/ IPL/ SPORTZPICS

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணி, பஞ்சாப் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா, பஞ்சாப் அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். முதலில் களத்தில் இறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முரளிவிஜய் 42 ரன்களும், வோஹ்ரா 38 ரன்களும், ஸ்டோனிஸ் 33 ரன்களும் எடுத்தனர்.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய குஜராத் அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே அவுட் ஆனாலும் ஃபின்ஸ் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார். மேலும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அவுட் ஆகாமல் எடுத்த 41 ரன்களால் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. ஃபின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

Leave a Reply