குஜராத் முதல் திடீர் பதவி விலகல். அடுத்த முதல்வர் யார்?
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடி, பிரதமர் பதவியை ஏற்றதை அடுத்து முதல்வர் பதவியை ஏற்ற ஆனந்தி பென் பட்டேல் இன்று முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆனந்தி பென் பட்டேல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது: ‘ஏற்கனவே 2 மாதத்திற்கு முன், பாரதிய ஜனதா கட்சித் தலைமைக்கு முதல்வர் பதவியில் இருந்து விலக அனுமதிக் கோரி கடிதம் எழுதினேன். 2 மாத காலம் பொறுத்துக் கொள்ளும்படி தலைமை கேட்டுக் கொண்டது. இதையடுத்து, பதவியில் தொடர்ந்தேன். இந்த நிலையில் இன்று மீண்டும் பதவி விலகக் கோரி அனுமதி கேட்டேன். இப்போது கட்சித் தலைமை அனுமதித்துள்ளது. அதனால் எனது ராஜினாமாவை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளேன். இவ்வாறு ஆனந்தி பென் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் முதல்வராக கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்றார். இந்நிலையில் ஆனந்தி பென்னுக்கு வரும் நவம்பர் 21ஆம் தேதியுடன் 75 வது வயது பிறக்கிறது. வயது முதிர்வு காரணமாக அவர் ராஜினாமா முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.