எஸ் வங்கியிலிருந்து 265 கோடி எடுத்த குஜராத் நிறுவனம்: பரபரப்பு தகவல்
எஸ் வங்கி வாராக் கடன்களால் சிக்கித் தவிப்பதால் அந்த வங்கி தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அதில் எத்தனை கோடி டெபாசிட் செய்து இருந்தாலும் மாதம் 50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது
ஆனால் குஜராத்தை சேர்ந்த நிறுவனமொன்று 265 கோடி ரூபாய் எஸ் வங்கியில் இருந்து எடுத்து உள்ளது என்பதும் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு இந்நிறுவனம் பணத்தை எடுத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிறுவனத்திற்கு மட்டும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்படுவது எப்படி முன்கூட்டியே தெரிந்தது என்பதே தற்போதைய மர்மமான கேள்விகளாக உள்ளன. முன்னதாக எஸ் வாங்கி இந்நிலைமை நிதி நெருக்கடியை யூகித்த திருப்பதி தேவஸ்தானம் 1300 கோடியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எடுத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது