ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைக்கவில்லை. வைரவியாபாரி மறுப்பு

ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைக்கவில்லை. வைரவியாபாரி மறுப்பு

1ரூ.500, ரூ.1000 செல்லாது என்று சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து கணக்கில் வராத கோடிக்கணக்கான கருப்புப்பணங்கள் குப்பையிலும், தீயில் எரிந்தும் வருகின்றன. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் என்பவர் தான் வைத்திருந்த ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்ததாக செய்திகள் வெளிவந்தது.

ஆனால் இந்த செய்தியில் துளியும் உண்மையில்லை என்று லால்ஜிபாய் படேல் மறுப்பு தெரிவித்துள்ளார். நான் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வைர வர்த்தம் செய்து வருகிறேன். என்னுடைய கணக்கில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. எனவே நான் ரூ.6000 கோடி கருப்பு பணத்தை ஒப்படைத்தேன் என்ற செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று தெரிவித்துள்ளார்.

இவர் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் என்பதும் இவர்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோடியின் உடையை ரூ.4.3 கோடிக்கு ஏலம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply