திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து சோனியாவிடம் குலாம்நபி ஆசாத் அவசர ஆலோசனை.
திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சி 45 இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் திமுகவோ, காங்கிரஸிடம் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்து போனதை காரணம் காட்டி 30 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்து வருகிறது. எனவே நேற்று நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவு ஏற்படாமல் முடிந்தது.
இந்நிலையில் இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவை, குலாம் நபி ஆசாத் மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் சந்தித்து திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து எந்த முறையில் பேசுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
திமுக கொடுப்பதை காங்கிரஸ் பெற்றுக்கொள்ளுமா? அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறுமா? என்பது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்ரன.