நவாஸ் ஷெரீப்பை தண்டித்த நீதிபதி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர்
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி, இஜாஸ் உல் அசன் சமீபத்தில் நவாஸ் ஷெரிப் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க தடை விதித்தார். இந்த தீர்ப்பு நவாஸ் ஷெரீப் ஆதரவாளர்களை கடும் ஆத்திரத்தை வரவழைத்த நிலையில் இவரது வீட்டை நோக்கி மர்ம நபர்கள் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து நீதிபதியின் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிபதி இஜாஸ் உல் அசன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் விசாரணை நடத்தி தண்டனை தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்று இருந்தவர் என்பதும், அந்த தீர்ப்பினை அமல்படுத்துவதை மேற்பார்வையிடும் குழுவில் அங்கம் வகித்து வந்ததும், நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மீது தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் தொடரப்பட்டு உள்ள வழக்குகளை கண்காணித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.