பிலிப்பின்ஸ் நாட்டி பெண் மேயர் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் நேற்று முன் தினம் கடத்திச் சென்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிலிப்பின்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த நாகா என்ற நகரத்தின் மேயராக தேர்வு செய்யப்பட்ட ஜெம்மா ஆடனா என்பவர் தனது தோழியுடன் சம்பவ தினத்தின் இரவில் தனது இல்லத்திலிருந்து வெளியே வந்தபோது மர்ம நபர்கள் 5 பேர் துப்பாக்கியுடன் அவர்கள் எதிரே வந்து மேயரை கடத்தியதாகவும், அவரை மர்ம நபர்கள் படகு மூலம் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட ஜெம்மாவை தேடுவதற்கு பிலிப்பைன்ஸின் திறமை மிகுந்த அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ள தனிப்படை தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும், மேயரைக் கடத்திய மர்ம நபர்கள் இதுவரை யாரையும் தொடர்பு கொள்ளவோ, பிணைத் தொகை கேட்கவோ இல்லை என்றும் நாகா நகர காவல்துறை அதிகாரி வில்பிரிம் திஸ்மன் அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
பிலிப்பின்ஸில் செயல்பட்டு வரும் அபு சையஃப் பயங்கரவாதிகள் அல்லது பணத்திற்காக ஆள்கடத்தலில் ஈடுபடும் கும்பல் ஆகியோர்கள் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகம் கொண்டுள்ளனர்.