ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் தண்டனை அறிவிப்பு
தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மீக அமைப்பு ஒன்றின் தலைவர் ராம் ரஹிம் சிங் என்பவரின் தண்டனை இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் நீதிபதி வழங்கிய தீர்ப்பில் அவருக்கு பத்து வருட சிறைத்தண்டனை என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ராம் ரஹிம் சிங் தன்னுடைய ஆசிரமத்தில் இருந்த 2 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 15 வருடத்திற்கு முன்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு காலதாமதமாகி தற்போது ராம் ரஹிம் குற்றவாளி என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு பத்து வருட சிறைதண்டனை என்று சற்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.