ஜி.வி.பிரகாஷ்-சரத்குமார் இணையும் ‘அடங்காதே’ திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ்-சரத்குமார் இணையும் ‘அடங்காதே’ திரைப்படம்

gvp-sarathஇளம் நடிகர், மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது ‘கடவுள் இருக்கான் குமாரு’, புரூஸ்லீ, ராஜீவ் மேனன் இயக்கும் படம் என பிசியாக உள்ளார். அதுமட்டுமின்றி ஒருசில படங்களுக்கு அவர் இசையமைத்தும் வருகிறார். இந்நிலையில் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘அடங்காதே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷூடன் இணைந்து சரத்குமார் நடிக்கவுள்ளார். சரத்குமாருக்கு இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டர் என்று கூறப்படுகிறது. அறிமுக இயக்குனர் சண்முகம் இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.

வேலையில்லா பட்டதாரி, இவன் வேற மாதிரி ஆகிய படங்களில் நடித்த சுரபி இந்த படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் முதன்முறையாக அவர் கிளாமர் ரோலில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply