நீட் மாணவர்களுக்காக ஆப் தயாரிக்கும் ஜிவி பிரகாஷ்

நீட் மாணவர்களுக்காக ஆப் தயாரிக்கும் ஜிவி பிரகாஷ்

நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இலவச மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் ஜீ.வி.பிரகாஷ்.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: “நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்குச் சென்றபோது, இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக் கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன். என் நண்பர்களுடன் பேசி, வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, நீட் தொடர்பாக மூன்று மாதங்களாக வரைவுத்திட்டத்தைத் தயாரித்து, தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாகப் பயன்பெறும் வகையில் மென்செயலி (மொபைல் அப்ளிகேஷன்) உருவாகி வருகிறது.

தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றைக் காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி. இன்னும் சில மாதங்களில் பணி முடிந்து இந்த மென்செயலி பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துகள்”

இவ்வாறு ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply