விஸ்வரூபம் எடுத்த பெரியார் சிலை உடைப்பு விவகாரம்: பணிந்தார் எச்.ராஜா
திராவிட அமைப்புகளின் கடும் எதிர்ப்புகளை தொடா்ந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று தமது ஃபேஸ்புக் பதிவை எச்.ராஜா நீக்கியுள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போன்று நாளை தமிழகத்தில் பெரியாரின் சிலை அகற்றப்படும் என்று எச்.ராஜா முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.. இந்த கருத்திற்கு திராவிட அமைப்புகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்தன
இது தொடா்பாக தி.மு.க. செயல் தலைவா் ஸ்டாலின் கூறுகையில், பெரியாரின் சிலையை தொட்டு பார்க்க கூட தகுதி இல்லாதவா்கள் சிலை அகற்றப்படும் என்று கூறுகின்றனா். தொடா்ந்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வரும் ஹெச்.ராஜாவை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி, சுபவீரபாண்டியன் ஆகியோர்களும் எச்.ராஜாவுக்கு எதிராக ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தனது ஃபேஸ்புக் கருத்தை அவர் நீக்கி, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.