சுப்பிரமணியன் சுவாமியுடன் ராஜா சந்திப்பு. பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.

Subramanian-Swamy-PTIஇலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய கருத்து கூறியதால் அவரை சந்திப்பதை தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் தவிர்த்து வரும் நிலையில், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா- சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு சமீபத்தில் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சேவுக்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் நல்ல நட்பு இருப்பதால் அந்த நட்பை பயன்படுத்தி தமிழக மீனவர்களின் படகுகளை அவர் மீட்டுத்தரவேண்டும் என மீனவர்கள் சார்பில் எச்.ராஜா, சுப்பிரமணியம் சுவாமியிடம் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பின்போது சந்திரலேகாவும் உடனிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக பாஜக மாநில நிர்வாகி ஒருவர் அளித்த பேட்டியில் “”தமிழக பாஜக தலைவர்களை தனது டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்து வருகிறார். தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என ராஜபட்சவிடம் கூறியதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து புகார் ஒன்று தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுவாமியை எச்.ராஜா சந்தித்திருப்பது தேவையற்றது” என்றார்.

மாநிலத் தலைவருக்குத் தெரியாமல் சுப்பிரமணியன் சுவாமியை ராஜா சந்தித்திருப்பதால், இதுகுறித்து தேசியத் தலைவர் அமித் ஷா, தமிழகப் பொறுப்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோரிடம் தமிழிசை புகார் தெரிவித்திருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply