முதல்வருடன் பாஜக பிரமுகர் எச்.ராஜா திடீர் சந்திப்பு
கடந்த சில நாட்களாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகள் இணைப்பு, தினகரன் அணியினர்களின் எதிர்ப்பு, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிக்கை ஆகியவை காரணமாக தமிழக அரசியல் பரபரப்புடன் உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் தலையீடு அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில் சற்றுமுன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக பிரமுகரும் அக்கட்சியின் தேசிய செயலாளருமான எச்.ராஜா தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.
இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தமிழக அரசியல் பரபரப்புடன் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.