எச்.ராஜாவின் டுவீட் மிகுந்த மன வேதனையைத்தருகிறது: தமிழிசை
நேற்று எச்.ராஜா அவர்கள் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த டுவீட்டால் திமுகவினர் கொந்தளித்து எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எச்.ராஜாவின் இந்த டுவீட் குறித்து தான் மிகுந்த மன வேதனைப்படுவதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மன வேதனையைத்தருகிறது’ என்று கூறியுள்ளார்.