தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நாங்களாக உங்களை தூக்கி எறியப்படுவதற்குள் நீங்களாகவே மரியாதையாக வெளியேறி விடுங்கள் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிற்கு, பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைகோ, பாஜக அரசையும் மோடியையும் கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேபாள நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு இலங்கை அதிபர் ராஜபக்சே சந்தித்து தேர்தலில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்ததோடு, ஐந்து மீனவர்கள் விடுதலைக்கு நன்றி கூறினார். இதனை வைகோ கடுமையாக விமர்சித்து இருந்தாதால் தமிழக பாஜக தலைவர்கள் வைகோ மீது கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர்.
பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது, “மோடியையும், பா.ஜ.க.வையும் விமர்சித்து விட்டு வைகோ பாதுகாப்பாக வீடு செல்ல முடியாது என்று மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில் கூறும்போது பிரதமரையும் பாஜக அரசையும் தொடர்ந்து விமர்சித்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தூக்கியெறியப்படுவீர்கள், அதற்குள் நீங்களாகவே வெளியேறி விடுங்கள்’’ என்று கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து பா.ஜ.க கூட்டணி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.