பாஜக தமிழக தலைவர் ஆகிறாரா எச்.ராஜா? அமித்ஷா சென்னை வருகை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக மூன்றாக உடைந்தும் பாஜகவுக்கு இன்னும் செல்வாக்கு அதிகரித்தது போல் தெரியவில்லை என்பதில் பாஜக தலைமைக்கு வருத்தமாம். அதற்கு காரணம் தலைமை சரியில்லை என்ற முடிவுக்கு பாஜக தலைமை உடனடியாக தமிழக் பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மே மாதம் 10ம் தேதி தமிழகம் வருகிறார். அவர் 10ஆம் தேதி சென்னை; 11ல் திருப்பூர்; 12ல் மதுரை என, மூன்று இடங்களில் தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்துபேசுகிறார். அதன்பின், புதிய தலைமை பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக, பா.ஜ.,வினர் கூறுகின்றனர். இதுகுறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
மத்திய அமைச்சராக, பொன்.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதும், இடைக்கால ஏற்பாடாக, தமிழிசை சவுந்தரராஜன் தலைவராக நியமிக்கப் பட்டார். தமிழிசை, மூன்று ஆண்டுகளாக தலைவ ராக இருந்தும், கட்சியில் பெரிய எழுச்சி ஏற்பட வில்லை. அதனால், புதிய தலைவரை நியமிக்க, தேசிய தலைமை முடிவு செய்துள்ளது.
புதிய தலைவராக அரசகுமார்; பொன்.ராதா கிருஷ்ணன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் பரிசீலனையில் இருந்தாலும் எச்.ராஜாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.