பாஜக இணையதளம் முடக்கம்: ஆசிபாவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஹேக்கர்ஸ்

பாஜக இணையதளம் முடக்கம்: ஆசிபாவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஹேக்கர்ஸ்

காஷ்மீரில் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜகவினர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் ஆத்திரம் அடைந்த ஹேக்கர்கள் பாஜகவின் அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்கியுள்ளனர்.

‘டீம் கேரளா சைபர் வாரியர்ஸ்’ என்ற ஹேக்கிங் குழு இதுகுறித்து கூறியதாவது: ‘பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதிவேண்டும்’ என்ற வாசகத்தை பாஜகவின் இணையதளத்தை ஹேக்கிங் செய்து பதிவு செய்துள்ளது.

இந்திய தேசியக்கொடியின் வண்ணங்களை பயன்படுத்தி தகவலை வெளியிட்டு உள்ள ஹேக்கர்கள், மனித நேயத்திற்கு அப்பால் எதுவும் இருக்க கூடாது, பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என தகவல் பதிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ.க.வின் காஷ்மீர் மாநிலம் பொதுச் செயலாளர் அசோக் கவுல் கூறுகையில் ஹேக்கிங் செய்யப்பட்ட இணையதளம் இப்போது சரிசெய்யப்பட்டுவிட்டது என்றும் நாங்கள் போலீசில் புகார் கொடுத்து உள்ளோம் என்றும் வடக்கு கேரளாவை சேர்ந்தவர் ஹேக்கிங் செய்யப்பட்டதற்கு பொறுப்பாளி என தெரிகிறது என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply