ஹேக்கர்கள் திருடிய 2 மில்லியன் ரூபிள்கள். ரஷ்ய வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி
இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து ஹேக்கர்களின் தொல்லைகளும் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக ஹேக்கர்களின் பார்வை வங்கியின் மீதே அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் புகழ் பெற்ற வங்கிகளில் ஒன்றாகிய ரஷ்ய மத்திய வங்கியில் ஹேக்கர்கள் நேற்று ஊடுருவி சுமார் இரண்டு மில்லியன் ரூபிள்களை திருடியுள்ளனர். இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.200 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பெரிய தொகையை ஹேக்கர்கள் திருடியதை அறிந்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ரஷ்யாவின் நிதித்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. கொள்ளையடித்த ஹேக்கரை பிடிப்பது எப்படி? என்பது குறித்து சைபர் க்ரைம் அதிகாரிகளுடன் ரஷ்ய வங்கி அதிகாரிகள் கலந்தாலோசித்து வருகின்றனர்.
ரஷ்யாவில் மட்டுமின்றி இந்தியா உள்பட அனைத்து நாடுகளின் ஹேக்கர்கள் கைவரிசை அதிகமாகி வருவதால் வங்கி வாடிக்கையாளர்களும், வங்கி அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.