கடந்த 2012ஆம் மும்பை-கொல்கத்தா இடையிலான ஆட்டம் ஒன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போது கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கானுக்கும், பாதுகாப்பு ஊழியர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஷாருக்கான் மும்பை வான்கடே மைதான வளாகத்தில் நுழைய 5 ஆண்டு தடையை மும்பை கிரிக்கெட் சங்கம் விதித்தது.,
இதன்காரணமாக கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் மும்பை அணி மற்றும் கொல்கத்தா அணிகள் வான்கடே ஸ்டேடியத்தில் மோதியபோது ஷாருக்கான் செல்லவில்லை. அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்னும் நீடிப்பதால் அவரை இந்த வருடமும் மைதானத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
வரும் 14ஆம் தேதி மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணி இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 6ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்து 6வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றியும், 4 தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஒரு புள்ளி மட்டும் எடுத்தது.