சிலருக்கு கூந்தல் பார்க்க கவர்ச்சி இல்லாமல் இருக்கும். மேலும் வலுவிழந்தும் காணப்படும். அப்படிப்பட்டவர்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி பலன் பெறலாம். தேவையான பொருட்கள்: –
– முட்டைகள்
– தேங்காய் எண்ணெய்
தயாரிக்கும் முறை:
முட்டையின் மஞ்சள் கரு இரண்டை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, நுரை தள்ளும் அளவிற்கு அதை நன்றாக அடியுங்கள். பின் அதனுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்கவும். உங்கள் தலைமுடியை கழுவிய பின்பு, இந்த கலவையை உங்கள் முடியில் தேய்த்து 5 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள்.
பின் தண்ணீரை கொண்டு முடியை கழுவினால் ஆழமான கண்டிஷனிங் பயனை பெறலாம். இப்படி செய்வதால் சொரசொரப்பான மற்றும் சுருண்ட முடி பிரச்சனைகள் நீங்கி தலை முடியை மென்மையாக மாற்றும்.