முடி உதிர்வதை தடுக்கும் எண்ணெய் மசாஜ், இயற்கை சாறு மருத்துவம்

3b751834-bf0a-495e-8688-25dbd9387abf_S_secvpf

வெது வெதுப்பான எண்ணெய் மசாஜ்

• ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒரு எண்ணையை (அ) மூன்றையும் சம விகிதத்தில் கலந்து, வெது வெதுப்பாக (மட்டும்) சுட வைத்து, தலைமுடி வேர் இருக்கும் தோல் பகுதியில் நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

• சுடு நீரில் முக்கி எடுத்த ஒரு துவாலையால் தலையை கட்டி ஒரு மணி நேரம் ஊறிய பின்பு, சீயக்காய் அல்லது ஷாம்பூ தேய்த்து குளிக்க வேண்டும்

இயற்கை சாறு மருத்துவம் :

• பூண்டு சாறு (அ) இஞ்சி சாறு (அ) சின்ன வெங்காய சாறு, இவற்றில் ஏதேனும் ஒன்றை முதல் நாள் இரவே தலையில் நன்றாக தேய்த்து ஊற வைத்து, மறு நாள் காலை தலைக்கு குளிக்க வேண்டும்.

• இதே போல வெது வெதுப்பான பச்சை தேநீரை ( Green Tea ) தலையில் மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊறிய பின்பு தலைக்கு குளித்தால், ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு முடி வேர்கள் நன்கு செயல் புரியும். 

Leave a Reply