பிலிப்பைன்ஸ் நாட்டை ‘ஹையான்’ என்ற பயங்கர புயல் தாக்கியது. இப்புயல் நேற்று சமர் தீவில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 235 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது.
புயலுடன் பலத்த மழையும் பெய்ததால் மின்சாரம், தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையை சரியாக உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புயல் தாக்கியதில் வீடுகள் இடிந்தும், நிலச்சரிவு மற்றும வெள்ளத்தில் சிக்கியும் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏராளமான உடல்கள் தெருக்களில் ஆங்காங்கே சிதறி கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.