சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதா, தனது மகன் சித்தார்த்தை ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்துகிறார். அந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த படத்தின் ஒரு பாடல் காட்சியை கோவா கடற்கரையில் படமாக்க படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். ஹன்சிகா கவர்ச்சியான உடையில் கோவா கடற்கரையில் படப்பிடிப்புக்கு தயாராக இருந்தபோது, திடீரென வந்த 10 பேர் கும்பல் ஒன்று ஹன்சிகாவிடம் அத்துமீறி நடந்தது. படக்குழுவினர் எச்சரித்தும், அந்த கும்பல் சளைக்கவில்லை. ஹன்சிகாவிடம் தொட்டு தொட்டு பேசிய அவர்கள் சில நிமிடங்களில் எல்லை மீறத்தொடங்கினார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹன்சிகா, உடனடியாக படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்றுவிட்டார். பின்புதான் இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்தது ஹீரோ சித்தார்த் என்பது ஹன்சிகாவுக்கு தெரியவந்தது. சித்தார்த்தே ஆள்வைத்து ஹன்சிகாவை மிரட்டியதாக தெரிய வந்ததால், ஹீரோ மீது கடுங்கோபத்தில் இருக்கிறார் ஹன்சிகா.