சிம்புவை வாழ்த்திய பிரேக் அப் ஆன காதலி

vaaluஇரண்டு வருடங்களாக இப்பொழுது ரிலீஸாகும், அப்பொழுது ரிலீஸாகும் என போக்கு காட்டிய சிம்புவின் ‘வாலு’ திரைப்படம் ஒருவழியாக நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் நாயகியும், சிம்புவின் முன்னாள் காதலியுமான ஹன்சிகா, சிம்பு உள்பட படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பல மாதங்களாக ‘வாலு’ திரைப்படம் வெளியாகும் என தான் காத்திருந்ததாகவும், தற்போதுதான் அதற்குரிய நேரம் வந்திருப்பதாகவும் கூறிய ஹன்சிகா, இந்த படத்தில் தன்னுடைய கேரக்டர் பக்கத்து வீட்டை பெண் போன்ற ஒரு இயல்பான கேரக்டர் என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் தன்னுடைய நடிப்பு எப்படி உள்ளது என்ற விமர்சனத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறிய ஹன்சிகா, சிம்புவுக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுளார்.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம், விடிவி கணேஷ், பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியுள்ளார். எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்தை தற்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உரிமையை பெற்று உலகம் முழுவதும் வெளியிட உள்ளார்.

Leave a Reply