இணையத்தில் வைரலாக பரவும் ஹன்சிகாவின் நள்ளிரவு சேவை

இணையத்தில் வைரலாக பரவும் ஹன்சிகாவின் நள்ளிரவு சேவை

hansikaaநடிகைகளில் ஹன்சிகா மிகவும் வித்தியாசமானவர். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சமூக சேவையிலும் ஈடுபடுவதிலும் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போது ஒரு குழந்தையை தத்து எடுத்து ஹன்சிகா வளர்த்து வருகிறார். தற்போது அவரது பாதுகாப்பில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளன. சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போதும் ஹன்சிகா ரூ.15 லட்சம் நிவாரண நிதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது குளிர்காலம் தொடங்கிவிட்டதால் சென்னையில் சாலையோரங்களில் படுத்து தூங்கும் ஏழை எளிய மக்கள் குளிரில் நடுங்குவதை அவர் தற்செயலாக காரில் செல்லும்போது பார்த்துள்ளார். உடனடியாக அவர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய முடிவு செய்த ஹன்சிகா அந்த நள்ளிரவு நேரத்தில் அவர்களுக்கு தேவையான பெட்ஷீட், கம்பளி மற்றும் ஆடைகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடி சென்று தூங்கிக்கொண்டிருக்கும் ஏழை மக்களின் அருகே வைத்துள்ளார்.

தூங்குபவர்களை எழுப்ப மனமில்லாமல் அவர் செய்த இந்த உதவி மிகவும் பாராட்டுக்குரியது என்று டுவிட்டரில் பலர் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது

https://www.youtube.com/watch?v=Vw5fT9REoeo

Leave a Reply