டுவிட்டர் உதவியால் ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் ஒருசில நிமிடங்களில் கைது.
தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் குற்றவாளிகளும், குற்றம் செய்பவர்களும் உடனடியாக பிடிபடும் நிலை உள்ளது. இதற்கு உதாரணமாக ஓடும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சில்மிஷம் செய்த ஒருவர் அடுத்த சில நிமிடங்களில் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் இருந்து பாட்னா சென்று கொண்டிருந்த ஷ்ரம்ஜீவன் என்ற ரயிலில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். பெட்டியில் தனியாக இருந்த பெண்ணிடம், வாலிபர் ஒருவர் தவறான வார்த்தைகளை பிரயோகித்து சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்ததாகவும், உடனடியாக அந்த பெண் ரயில்வே அமைச்சகத்துக்கு டுவீட் செய்ததாகவும், இதையடுத்து அதே ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசாருக்கு ரயில்வே அமைச்சகம் தகவல் கொடுத்ததாகவும், ரயில்வே போலீஸார் விரைந்து அந்த பெட்டிக்கு சென்று சில்மிஷம் செய்த வாலிபரை கைது செய்ததாகவும் தகவ்லகள் வெளிவந்துள்ளது.
ரயில்வே அமைச்சகம் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால், மகிழ்ச்சி அடைந்த அந்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கும், தன்னை காப்பாற்றிய ரயில்வே போலீசாருக்கும் மீண்டும் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ரயிலில் தனியாக செல்லும் பெண் பயணிகளுக்கு தைரியத்தை கொடுத்துள்ளதாக பலர் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
English Summary: Girl Tweets To RailMin On Being Harassed On Board The Shramjeevi Express, Accused Gets Arrested