மூச்சு விடுவதில் சிரமமா? மூச்சுத் திணறல் ஏன் ஏற்படுகிறது?

db8a5390-c7c7-4ae4-921e-9a773af2ed60_S_secvpf

இயற்கையாய் நிகழும் சுவாசம் நாம் அறியாமலேயே நிகழ்கின்றது. இந்த மூச்சு நிகழ்வில் சிரமம் ஏற்படும் பொழுது, தேவையான காற்று கிடைக்கவில்லை என்பது போல் உணர்வு ஏற்படும் பொழுது ஒரு தொந்தரவினை உணர்கிறோம். சிலருக்கு எளிய பயிற்சியே மூச்சு வாங்கும். மாடி மெதுவாய் ஏறினால் கூட சிலருக்கு மூச்சு வாங்கும்.

ஆஸ்துமா, இழுப்பு பிரச்சினை உடையவர்களுக்கு அதிக சத்தத்தோடு சுவாசம் நிகழும். இருதயத்தினால் போதுமான ரத்தத்தினை பம்ப் செய்ய இயலாத பொழுது மூச்சு திணறுவது போல் இருக்கும். மூளை உட்பட எந்த ஒரு உறுப்பிற்கும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும். தொடர் பாதிப்பில் நோயின் தாக்கம் கூடிக் கொண்டே போகும்.

நீண்ட கால சைனஸ் தொல்லை, மூக்கடைப்பு இவை கூட மூச்சு விடுவதில் சிரமத்தினை ஏற்படுத்தலாம். பொதுவில் வேக வேகமான மூச்சின் மூலம் ஆக்ஸிஜன் பெற உடல் போராடும் என்பதால் அவசர சிகிச்சையும் அதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையும் இதற்கு அவசியம். கீழ் கூறப்பட்டுள்ளவை உங்களுக்கு உள்ளதா?

* ஏதாவது ஒரு காரணத்தினால் மூச்சுத் திணறல் ஏற்படுகின்றதா?

 * எவ்வளவு தூரம் நடக்க முடிகின்றது.

* படுத்தால் மூச்சுத் திணறல் அதிகமாகின்றதா?

* உடல் நலம் சரியில்லாதது போல் உணர்கின்றீர்களா?

* எடைகுறைந்துள்ளதா?

* இருமலில் சளி வருகின்றதா?

* சளியின் ரத்தம் உள்ளதா?

* டிபி நோயாளிகளின் அருகில் இருக்கின்றீர்களா?

* நீங்கள் புகை பிடிக்கின்றீர்களா? இவைகளை உங்கள் மருத்துவரிடம் நீங்கள் கூற வேண்டும்.

ஏன் மூச்சுத் திணறல் ஏற்படுகின்றது?

ஆஸ்துமா, அலர்ஜி, மூச்சுத்திணறல் அதிகம் இருக்கும். நிமோனியா: நுரையீரலில் அதிக கிருமி பாதிப்பு இருக்கும். ஜுரம் இருமல் இருக்கும். சளி பச்சை நிறமாக இருக்கும்.

இருதய நோய்: இருதயம் சரியாய் இயங்க முடியாத நிலையில் மூச்சுத் திணறல் ஏற்படும்.

* நுரையீரல் பாதிப்பு: நுரையீரலில் ரத்த கட்டி அடைப்பு ஏற்படும் பொழுது மூச்சுத் திணறல் வரும். காலில் ஏற்படும். ரத்த கட்டி ஆடு தசையில் அதிக வலியினையும், வீக்கத்தினையும் ஏற்படுத்தும். அது பாதிக்கப்பட்டோர் அதிக நடமாட்டமின்றி வெகு நாள் இருக்கும் பொழுது ரத்தத்தின் மூலமா நுரையீரலை அடையும் பொழுது மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்.

* மன உளைச்சல், கவலை இவை படபடப்பினையும், மூச்சுத் திணறலையும் உருவாக்கும்.

* ரத்த சோகை: ரத்த சோகை உடையவர்களுக்கு 10 அடி நடந்தாலே மூச்சுத் திணறல் ஏற்படுத்தும்.

* உடலில் ஏதாவது காரணத்தினால் அதிக வலி ஏற்படும் பொழுது மூச்சுத் திணறல் ஏற்படும்.

அதிக கால மூச்சுத் திணறல் ஏற்படுவதன் காரணங்கள்:

* அதிக எடை

* கட்டுப்படாத ஆஸ்துமா

* புகை பிடிப்பதால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு

* இருதய பாதிப்பு – மூச்சுத் திணறல், கணுக்கால் வீக்கம், முறையற்ற இருதய துடிப்பு என இருக்கும்.

* அதிக ரத்த போக்கு (விபத்து, மாதவிலக்கில் அதிக ரத்த போக்கு போன்றவை)

* சளி, ப்ளூ

* மரகத்தூள்

* சிறு பூச்சிகள்

* கரப்பான் பூச்சி

* உணவு அலர்ஜி

* ஒத்துக் கொள்ள வாசனை போன்றவை ஆகும்.

காரணத்திற்கான சிகிச்சை எடுக்கும் பொழுதே தீர்வு கிடைக்கும். பொதுவில் இத்தகைய பாதிப்புடையோர் சிறுசிறு உணவாக 4-6 முறை எடுத்துக் கொள்வது நல்லது. நடை பயிற்சி உதவும். செயற்கை குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். 

Leave a Reply