பாலியல் கல்வி பயில வெளிநாடு சென்ற முன்னணி நடிகை.

16விபச்சாரம் பற்றிய பயிற்சி பெறுவதற்காக வெளிநாட்டிற்கு சென்று வந்த நடிகை குறித்து பாலிவுட் படவுலகில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

பாலிவுட் நடிகை ஹர்ஷா பூனாச்சா என்ற நடிகை தற்போது குலாபி ஸ்டீரீட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தில் அவர் பாலியல் தொழிலாளியாக நடிக்கவுள்ளார். எனவே இந்த கேரக்டரை மிகவும் திறம்பட செய்ய அவர் விபச்சாரத்தை அங்கீகரித்த ஒரு நாட்டிற்கு சென்று, அங்கு பாலியல் தொழில் செய்யும் பெண்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இரண்டு மாதம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றார்.

ஹர்ஷா எந்த நாட்டிற்கு சென்றார் என்பதை அவர் வெளியிடவில்லை. அந்த நாட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து பாலியல் தொழில் புரியும் பெண்களுடன் பழகி, நிறைய கற்றுக்கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.  மேலும் அந்த நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில்  “Behaviours and mannerisms of prostitutes” என்ற பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து சர்டிபிகேட் கோர்ஸ் ஒன்றை அஞ்சல் வழியில் அவர் படிக்க இருப்பதாகவும் கூறினார். அவரது வெளிநாட்டு செலவு மற்றும் படிப்பு செலவு ஆகிய அனைத்தையும் தயாரிப்பாளரே ஏற்றுக்கொண்டுள்ளார்.

குலாபி ஸ்டீர்ட் என்ற படத்தை பிரதீப் குமார் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ஸ்வேதா பண்டிட் மற்றும் பாவனா ராவ் ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். வீர் சமரத் என்பவர் இசையமிக்கிறார். வரும் ஜூன் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Leave a Reply