படிப்பை பாதியில் நிறுத்திய ‘பேஸ்-புக்’ நிறுவனருக்கு டாக்டர் பட்டம்

படிப்பை பாதியில் நிறுத்திய ‘பேஸ்-புக்’ நிறுவனருக்கு டாக்டர் பட்டம்

படிப்புக்கும் பணக்காரர் ஆவதற்கும் சம்பந்தம் இல்லை என்று எத்தனையோ உதாரணங்கள் இருந்து வரும் நிலையில் அதற்கு இன்னொரு உதாரணமாக பேஸ்புக் நிறுவனர் மார்க் உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்த மார்க், ஃபேஸ்புக் பணி காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வெளியே வந்து விட்டார். இன்று அவர் ஆரம்பித்த ஃபேஸ்புக்கை உலகமே கொண்டாடி வந்தாலும் தன்னால் ஹார்ட்வர்ட் பல்கலையில் ஒரு பட்டம் பெற முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் மனதில் கடந்த பல ஆண்டுகளாக இருந்தது

இந்நிலையில் அவருடைய தொழில் சாதனைக்காக ஹார்வர்டு பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது. எந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற முடியாமல் போனதோ அதே பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிப்பது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply