குட்கா, பான் மாசலா விற்பனை மற்றும் தயாரிப்புக்கு 1 ஆண்டு தடை. ஹரியானா அரசு அதிரடி
மது, சிகரெட் போன்று மனிதனின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய பொருள் குட்கா, பான்மசாலா. இந்த போதை பொருட்களை தடை செய்ய வேண்டும் என நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள் வற்புறுத்தி வருகிறது. இந்நிலையில் முதல்கட்டமாக ஹரியாணா மாநில அரசு குட்கா, பான் மாசாலா உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. மக்களின் உடல்நலனை கருத்தில்கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜி தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “குட்கா, பான் மாசலா, வாசனை புகையிலை, கர்ரா மற்றும் புகையிலை கொண்ட போதை பொருட்கள் மற்றும் பிற பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது, விநியோகம் மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்தத் தடை தொடர்பாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைக்கு செப்டம்பர் 3 முதல் ஓராண்டுக்கு இத்தடை அமலில் இருக்கும்” என்று கூறினார். உணவுப் பொருட்களில் வாசனை மற்றும் சுவையூட்டுவதற்காக சில வகை பொருட்களை பயன்படுத்தவும் ஹரியாணா அரசு தடை விதித்துள்ளது.