தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் த்ரிஷா இவ்வருட இறுதியில் தொழிலதிபர் வருண் மணியனை திருமணம் செய்யவுள்ளார். கடந்த ஜனவரி 23ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடந்த த்ரிஷாவுக்கு இவ்வருட இறுதியில் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் த்ரிஷா தற்போது அப்பாடக்கர், போகி, லயன், தனது மேனேஜர் கிரிதரன் தயாரிக்கும் திரைப்படம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது மேனெஜர் கிரிதரன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதால் தனது வருங்கால கணவர் வருண் மணியன் தயாரிக்கும் படத்தில் இருந்து அவர் விலகுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. வருண்மணியன் தயாரிப்பில் ஜெய் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்புக்கொண்டிருந்தார். இந்த படத்தை ‘சமர், தீராத விளையாட்டு பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கவுள்ளார்.
மானேஜருக்காக வருங்கால கணவர் படத்தில் இருந்து விலகிய செய்தி வெளியானதும் கோலிவுட்டில் திடீர் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.