நாம் செய்ய நினைக்கும் அல்லது விரும்பும் செயல்களைத் திட்டமிட்டபடி செய்து முடிக்க உதவும் வகையிலான சேவைகளுக்கு இணையத்தில் பஞ்சமில்லை. பொதுவாக டுடூ (todo) லிஸ்ட் சேவைகள் என இவை குறிப்பிடப்படுகின்றன. இந்த வகை திட்டமிடலை கூகுள் நாட்காட்டி (கூகுள் காலெண்டர்) சேவை மூலம் செய்து முடிக்க உதவும் வசதியை ஹாஷ்டேக் டுடூ அளிக்கிறது.
இதற்காக, இந்த சேவையில் உறுப்பினராகப் பதிவு செய்துகொண்டால் மட்டும் போதும். அதன் பிறகு கூகுள் நாட்காட்டி சேவையில் செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்துவைத்தாலும் அதனுடன் டுடூ ஹாஷ்டேகை (#todo) சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர், அந்த வேலையை நாட்காட்டி மூலம் அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அதைச் செய்து முடித்தாகிவிட்டது எனத் தெரிவிக்கும் வரை இந்த நினைவூட்டல் தொடரும்:
https://www.hashtagtodo.com/index.html