சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

சென்னை, போரூரில் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தஷ்வந்துக்கு இன்று செங்கல்பட்டு மகளை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆள்கடத்தல், தடயத்தை மறைக்க முயற்சித்தல் போன்ற குற்றங்களுக்கு 46 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து சிறுமி ஹாசினியின் தந்தை கூறியதாவது ”எனக்கு நியாயம் கிடைத்து இருக்கிறது. தீர்ப்பு திருப்தி அளிக்கிறது. ஓராண்டு கழித்து நியாயம் கிடைத்து இருக்கிறது. நான் இந்த வழக்கை தொடுத்த போது வழக்கை தொடுக்க வேண்டாம் தாமதாமாகும் என்று தெரிவித்து இருந்தனர். ஆனால், நான் நியாயம் கிடைக்கும் என்று வழக்கு தொடுத்தேன்.

அவன் ஒரு மனிதனே இல்லை. என்னுடைய மகளையும் கொன்று, அவனது தாயையும் கொன்றுள்ளான். அவன் எப்படி மனிதனாக இருக்க முடியும். இப்படிபட்டநீதிமன்ற தீர்ப்பால் எனது போராட்டத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. எனது மகளுக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. நியாயம் கிடைக்க போராடிய மாங்காடு காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply